Thursday, February 11, 2016

கிரிக்கெட்டிலும் வருகிறது ரெட் கார்டு முறை


உலகில் கிரிக்கெட்டைத் தவிர பெரும்பாலான போட்டிகளில் ரெட் கார்டு, மஞ்சள் கார்டு போன்றவை உள்ளது. குறிப்பாக கால்பந்தில் ஒரு வீரர் தகாத முறையில் (தாக்குதல் ஆட்டம், வேண்டும்மென்றே எதிரணி வீரரை கிழே தள்ளிவிடுதல்) ஈடுபடும்போது மஞ்சள் கார்டு அளித்து எச்சரிக்கை படுத்தப்படுவார். மோசமான தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு நடுவர் உடனடியாக ரெட் கார்டு காண்பித்து வெளியே அனுப்பிவிடுவார்.

தற்போது கிரிக்கெட்டில் இருவர் மைதானத்திற்குள் மோதிக்கொண்டால், மைதான நடுவர் ஐ.சி.சி.யிடம் புகார் அளிப்பார்கள். அவர்கள் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி தண்டனை அளிப்பார்கள். இதனால் ஒருவர் செய்த தவறுக்கு சில நாட்கள் கழித்துதான் தண்டனை கிடைக்கும்.

இதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் கிரிக்கெட்டிலும் ரெட் கார்டு முறையை அறிமுகப்படுத்த இங்கிலாந்தின் முன்னணி கிரிக்கெட் கிளப்பான மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்தில் கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் கிளப் அணிகளுக்கான தொடரில் ஐந்து போட்டிகள் வன்முறை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இதனால் கார்டு முறை அறிமுகப்படுத்தினால் வீரர்களின் மோசமான நடவடிக்கை குறையும் என எதிர்பார்க்க படுகிறது. மோசமான செயல்களில் ஈடுபடும் வீரர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார். இல்லையெனில் 10 ஓவர்கள் விளையாட முடியாமல் போகலாம்.

மிரட்டுதல் போன்ற நடவடிக்கை, இனவாத கருத்து மற்றும் வேகப்ந்து மூலம் பேட்ஸ்மேன்களை தாக்குதல் ஆகிய மூன்று நடவடிக்கைகளுக்கு கார்டு மூலம் தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று பிரிவிற்கும் குறைவான செயலில் ஈடுபட்டால் ஐந்து ரன்கள் குறைக்கப்படும்.